» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கத்திமுனையில் மிரட்டி மாணவியை கடத்த முயற்சி : பொதுமக்கள் தர்மஅடி

சனி 7, செப்டம்பர் 2019 6:33:18 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம், இரணியலில் பள்ளி ஆசிரியரை கத்தியைக் காட்டி மிரட்டி மாணவியை கடத்த முயற்சித்த இளைஞரை பொது மக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். 

கருங்கல் பகுதியைச் சேர்ந்த 15 வயதான மாணவி ஒருவர், இரணியல் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், ராஜபாளையம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்த ஜெய் (23) என்பவர் நேற்று தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று அங்கிருந்த ஆசிரியரிடம் மாணவியின் பெயரை சொல்லி, அவரது தந்தை இறந்து விட்டதாகவும், ஆகவே அவரை தன்னுடன் அனுப்புமாறு கேட்டுள்ளான். இதில் சந்தேகமடைந்த ஆசிரியர், மாணவியை அனுப்ப மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை ஆசிரியரின் கழுத்தில் வைத்து ஜெய் மிரட்டினாராம். ஆசிரியர் சத்தம் போடவே அவர் அங்கிருந்து தப்பியோட முயன்றான்.

அப்போது ரோட்டில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் இதை பார்த்து விட்டு இளைஞரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து விசாரித்தனர். அதில் மாணவியை அழைத்துச செல்ல வந்ததாக ஜெய் கூறியுள்ளான். மேலும், பேஸ்புக் மூலம் மாணவியுடன் ஏற்பட்ட காதலைத் தொடர்ந்து ஏற்கனவே அவரைக் கடந்த ஜூன் மாதம் கடத்திச் சென்று கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் 5 நாள்கள் குடும்பம் நடத்தியது, பிறகு போலீஸாரிடம் சிக்கி போக்சோ சட்டத்தில் கைதாகி சிறை சென்று நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தது ஆகிய தகவலையும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஜெயராமை, அவன் கொண்டுவந்த இருசக்கர வாகனம் மற்றும் கத்தியுடன் இரணியல் போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஜெயராம் மீது வழக்கு பதிவு செய்து அவரை மீண்டும் இரணியல் போலீசார் சிறையிலடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory