» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடிகர்களின் சம்பளம் வரைமுறைப்படுத்தப்படும் : அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ சூசக தகவல்

சனி 7, செப்டம்பர் 2019 8:25:31 PM (IST)சினிமா நடிகர்களின் சம்பளம் வரைமுறைப்படுத்தப்படும் என செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ சூசக தகவல் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வில்லிசேரி கிராமத்தில் ஊருக்கு நூறு கை திட்டத்தின் கீழ் அங்குள்ள குளத்தினை சீரமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார், விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார். இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ  கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து கயத்தார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தலைமையில் நடைபெற்றது. இதில் மேற்கொள்ளபட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். முன்னதாக கயத்தார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நடைபெற்ற இலவச மருத்துவ முகாமினை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு தொடங்கி வைத்தார். 

இதன் பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் விற்பனை குறித்து தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர், செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர், செயலாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், ஆன்லைன் டிக்கெட் விற்பனை திரைத்துறைக்கு ஆரோக்கியத்தை தரும். இந்த தொழில் மேம்படும் நிலையை இந்த அரசு முன்னெடுத்திருக்கிறது. இதனை நாங்கள் பாராட்டுக்கிறோம் என மனமுவந்து இந்த கூட்டத்தில் பங்கேற்றார்கள். 

நீங்கள் கேட்ட அம்சமும் (நடிகர்களின் சம்பளம் வரைமுறை ) அதில் இடம் பெற்று, தயாரிப்பாளர்களின் எந்த எந்த படங்களில் செலவு உள்ளிட்டவைகளை முழுமையாக அறிகின்ற நேரத்தில் எல்லாமே இறுதி வடிவம் பெற்று எல்லாமே சராசரியாக சரி செய்யப்படும் நிலை உருவாகும் என்றும்  இந்தியாவுக்கே முன்னுதாரணமாக தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு மைல்கல். தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து பேசி ஒருமித்த கருத்துடன் அடுத்த வாரம் எங்களை வந்து சந்திப்பதாக தெரிவித்துள்ளனர். அப்படி சந்திக்கும்போது நல்ல முடிவு எட்டப்படும். அதில் நடிகர்களின் சம்பளம் வரைமுறை ) உள்ளிட்ட அனைத்து இடம்பெறும் என்றார்.

தொடர்ந்து அவர் கூறும் போது, தபால் துறையில் தேர்வுகளை தமிழிலே எழுத மத்திய அரசிடம் இருந்து பெற்று தந்தது அதிமுக அரசு தான். நீதிமன்ற தீர்ப்புக்களை தமிழ் மொழியில் மாற்றம் செய்யும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என்றும், தாய் மொழியான தமிழை காக்கும் அரசாக அதிமுக அரசு இருக்கும். அனைத்திலும் தமிழ் பாதுகாக்கப்படும். ரயில்வே தேர்வுகளும் தமிழில் எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திமுகவினர் தமிழை அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர். தமிழுக்காக என்ன செய்தார்கள் என்று அவர்களை திரும்ப கேட்டால் தெரியும். 

தமிழ் வளர்ச்சி துறையை தொடங்கி ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து, சிகாகோவில் நடந்த உலக தமிழ் மாநாட்டில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரை கலந்து கொள்ள செய்து முதல்வர் பெருமை சேர்த்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பை கூட தமிழிலே பெற்றுத்தரலாம் என்ற உத்தரவை வாங்கியது அதிமுக அரசு தான். அவர்களது காலத்தில் தமிழுக்கு ஒன்று செய்யாமல். தமிழை வைத்து வெறும் அரசியல் நடத்தி கொண்டிருந்தார்கள், என்றார் .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory