» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுரையில் கணினி விற்பனை மையத்தில் பயங்கர தீவிபத்து: ரூ.6 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

திங்கள் 9, செப்டம்பர் 2019 11:18:59 AM (IST)

மதுரையில் கணினி விற்பனை மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ரூ.6 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. 

மதுரை வடக்குவெளி வீதியில் ஜெகன்நாதன் என்பவருக்குச் சொந்தமான கணினி விற்பனையகத்தில் நேற்று இரவு 9 மணியளவில் புகை வருவதை அருகில் இருந்த கடைக்காரர்கள் கவனித்து தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என்பதால் தீ மளமளவெனப் பரவியது. இதனையடுத்து கூடுதலாக வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 

மொத்தம் 4 தீயணைப்பு வண்டிகள், 2 சிறப்பு உபகரண வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் தீ அணைக்கப்பட்டது. இதில் கணினிகள், கணினி உதிரி பாகங்கள், கணினி சார்ந்த எலக்ட்ரானிக் உபகரணங்கள் எரிந்து சாம்பலாகின. ரூ.6 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானதாகத் தெரியவந்துள்ளது. முன்னதாக, நேற்று இரவு விடுமுறை நாள் என்பதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால், இன்று அதிகாலையில் மீண்டும் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory