» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ராஜினாமா முடிவை கைவிட வேண்டும்: தலைமை நீதிபதியுடன் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு

திங்கள் 9, செப்டம்பர் 2019 12:32:03 PM (IST)

ராஜினாமா முடிவை கைவிட வேண்டும் என தலைமை நீதிபதி தஹில் ரமானியை சந்தித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி தஹில்ரமானி தனது தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

இதற்கான கடிதத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி உள்ளார். அதன் நகலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார். அவரது ராஜினாமா இதுவரை ஏற்கப்படவில்லை. இந்நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ராஜினாமா செய்த தலைமை நீதிபதி ரஹில்  ரமானியை சந்தித்து பேசினார். அப்போது ராஜினாமா முடிவை கைவிட வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory