» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போக்குவரத்து கழக பெண் ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை: பரபரப்பு கடிதம் சிக்கியது

திங்கள் 9, செப்டம்பர் 2019 5:01:32 PM (IST)

ராமநாதபுரத்தில் போக்குவரத்து கழக பெண் ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் வீட்டில் சிக்கிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் காட்டூரணியைச் சேர்ந்தவர் நம்புராஜன். இவரது மனைவி ஷோபனா (41). இவர் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழகத்தில் புறநகர் பிரிவில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். வழக்கம் போல் நேற்று வேலைக்குச் சென்ற ஷோபனா அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த நம்புராஜன் மற்றும் உறவினர்கள் ஷோபனாவை பல்வேறு இடங்களில் தேடினர். பலன் இல்லை.

எனவே கேணிக்கரை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷோபனாவை தேடி வந்தனர்.இந்நிலையில் காட்டூரணியில் புதிதாக தோண்டப்பட்ட குடிநீர் கிணற்றில் பெண் பிணம் மிதப்பதாக கேணிக்கரை போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து உடலை மீட்டனர். பின்னர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் கிணற்றில் பிணமாக மிதந்தது மாயமான ஷோபனா என தெரியவந்தது. இந்நிலையில் ஷோபனா வீட்டில் அவர் எழுதி வைத்திருந்த பரபரப்பு கடிதம் சிக்கியது. அதில், தன்னுடன் பணியாற்றும் 3 பெண் ஊழியர்களின் டார்ச்சர் காரணமாகவே தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு காரணமான அவர்கள் மீது உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் ஊழியர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கிணற்றில் குதித்து தற்கொலை செய்த ஷோபனாவுக்கு ஒரு மகள் உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory