» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்? ராணுவம் எச்சரிக்கை

திங்கள் 9, செப்டம்பர் 2019 5:41:17 PM (IST)

சர் கிரீக் சிறுகுடா பகுதியில் கைவிடப்பட்ட பாகிஸ்தான் படகுகள் கிடைத்துள்ளதால் நாட்டின் தென்பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என ராணுவம் இன்று எச்சரித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் மண்டபம் அருகே உள்ள மனோலிபுட்டி தீவில் மர்மமான முறையில் பிளாஸ்டிக் படகு ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதை அந்த வழியாக நாட்டுப்படகில் கடந்த மாதம் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கவனித்து, கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதை தொடர்ந்து மண்டபம் கடலோர போலீசார் மண்டபம் தெற்கு துறைமுக பகுதியில் இருந்து ஒரு மீன்பிடி படகு மூலம் மனோலிபுட்டி தீவுக்கு விரைந்து சென்றனர்.

அங்கு தீவை ஒட்டிய கடல் பகுதியில் பிளாஸ்டிக் படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. அதில் இறங்கி கடலோர போலீசார் சோதனையிட்டனர். அந்த படகில் என்ஜினோ, தூண்டில் நரம்பு உள்ளிட்ட எந்தவொரு பொருட்களும் இல்லை என சோதனையில் தெரியவந்தது.இதையடுத்து தீவு பகுதிகளில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா, யாரும் பதுங்கி உள்ளனரா? என்று கடலோர போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். ஆனால் தீவு பகுதியிலோ யாரும் இல்லாததால் பிளாஸ்டிக் படகை மீன்பிடி படகு மூலம் கயிறு கட்டி மண்டபம் பகுதிக்கு இழுத்துச் சென்று சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல், குஜராத் மாநில கடல்பகுதியில் உள்ள சர் கிரீக் என்ற சிறுகுடாவில் சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இரு இயந்திரப் படகுகள் அனாதையாக மிதந்தன.இந்நிலையில், தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என இந்திய ராணுவத்தின்  தென்னிந்தியா பிரிவுக்கான தளபதி லெப்டினண்ட் ஜெனரல் எஸ்.கே.சைனி இன்று எச்சரித்துள்ளார். ’சமீபத்தில் சர் கிரீக் சிறுகுடா பகுதியில் கைவிடப்பட்ட படகுகள் கிடைத்துள்ளன. இந்தியாவின் தென்பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எங்களுக்கு உளவுத்தகவல் கிடைத்துள்ளது. இதை முன்எச்சரிக்கையுடன் உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்’ என எஸ்.கே.சைனி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory