» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் வந்ததால் பயணிகள் அச்சம் - பெரும் விபத்து தவிர்ப்பு

செவ்வாய் 10, செப்டம்பர் 2019 10:42:05 AM (IST)

காட்பாடி ரயில் நிலையம் அருகே 2 ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்த சம்பவத்தால் பயணிகளிடையே அச்சம் ஏற்பட்டது.

காட்பாடியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் ரயில் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. காட்பாடி ரயில் நிலையம் அருகே சென்றபோது, அதே பாதையில் சென்னையில் இருந்து காட்பாடி நோக்கி வந்த பயணிகள் ரயிலும்  வந்தது. ஒரே பாதையில் இரண்டு ரயில்களும் எதிர் எதிரே வந்ததால் பயணிகளிடையே அச்சம் ஏற்பட்டது. 

ஆனால் அதிர்ஷ்டவசமாக இரண்டு ரயில்களின் டிரைவர்களும் துரிதமாக செயல்பட்டு ரயில்களை நிறுத்தினர். 100 மீட்டர் இடைவெளியில் இரண்டு ரயில்களும் நிறுத்தப்பட்டதால் பெரும்  விபத்து தவிர்க்கப்பட்டது. ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் சென்றது எப்படி? என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

IndianSep 11, 2019 - 11:38:43 AM | Posted IP 108.1*****

Don't appoint north Indians ,and they don't know local language. If continues it will happen again and again.'

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory