» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண்கள் கையாளும் வகையில் தண்ணீர் கேன்களை வடிவமைக்க உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி

செவ்வாய் 10, செப்டம்பர் 2019 11:56:43 AM (IST)

பெண்கள் கையாளும் வகையில் தண்ணீர் கேன்களை வடிவமைக்க உத்தரவிட கோரிய வழக்கில் மனுதாரருக்குச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் குடிநீருக்காக 20 முதல் 25 லிட்டர் வரை மினரல் கேன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் குடிநீர் கேன்களைப் பெண்கள் தூக்கும் வகையில் வடிவமைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த தீபா ஸ்ரீ என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தற்போது பயன்படுத்தப்படும் தண்ணீர் கேன்களைப் பெண்களால் கையாள முடியவில்லை என்றும், அவற்றைச் சுகாதாரமான முறையில் பயன்படுத்த முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு முன்பு நேற்று (செப்டம்பர் 9) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் நினைக்கும் உத்தரவுகளைப் பெற நீதிமன்றம் ஒன்றும் வணிக வளாகம் அல்ல என்றும் மனுதாரர்களின் இதுபோன்ற கோரிக்கைகளை அரசிடம் கொண்டு போய் சேர்க்க நீதிமன்றம் ஒன்றும் தபால் நிலையம் கிடையாது என்றும் கண்டனம் தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory