» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் உட்பட 19,427 பணியிடங்கள் நிரந்தரம் : தமிழக அரசு அரசாணை

செவ்வாய் 10, செப்டம்பர் 2019 12:50:23 PM (IST)

பள்ளிக் கல்வித் துறையில் பல ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்த 19,427 ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரந்தர படுத்தி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறையில் பல ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பராமரிக்கப்பட்டு வந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில், முழு நேர ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இந்த பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும் என 2017-18 ஆம் கல்வி ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நிறைவில் 19,427 தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழகுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் பல ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் முழு நேர ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்களாக பணியாற்றி வந்த 19,427 பேரில், முதற்கட்டமாக 17 ஆயிரம் தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துள்ளார்.இதன்மூலம், இனி ஒவ்வொரு ஆண்டு அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனித்தனியாக அரசாணை பிறப்பிக்க தேவையில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory