» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நள்ளிரவில் ஓடும் ஜீப்பில் தாயின் மடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை காயங்களுடன் மீட்பு

செவ்வாய் 10, செப்டம்பர் 2019 4:23:42 PM (IST)நள்ளிரவில் ஓடும் ஜீப்பில் தாயின் மடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை 45 கிலோமீட்டர் தூரம் சென்று பிறகு பெற்றோர் தேடிப்பார்த்தனர். சிசிடிவி உதவியால் மீட்டு வனத்துறையினர் ஓப்படைத்தனர்.

நள்ளிரவில்  ஓடும் ஜீப்பில் இருந்து தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை ஒன்று சாலையில் தவழ்ந்து திரியும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கேரளாவின் இடுக்கி பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று  குழந்தைக்கு மொட்டைபோட பழனி கோவிலுக்கு  சென்று விட்டு ஜீப்பில்  சொந்த ஊர்  திரும்பி கொண்டு இருந்தது. ஜீப்பில்  அனைவரும் தூங்கிய நிலையில், திறந்திருந்த ஜன்னல் வழியாக குழந்தை வெளியே விழுந்து விட்டது. என்ன செய்வதென அறியாத அந்த பச்சிளங்குழந்தை சாலையில் அங்குமிங்கும் தவழ்ந்து சென்றது. இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அனைத்தும் அங்கியிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில் அவரது தந்தை சதீஷ் மற்றும் குடும்பத்தினர் காம்பிலிகண்டத்தில் உள்ள தங்கள் வீட்டிற்கு வந்து குழந்தையை காணவில்லை என்பதை உணர்ந்தனர்.45 கிலோமீட்டர்  தூரம் செல்லும் வரை பெற்றோர் இந்த விபத்தை உணரவில்லை. பின்னர் குழந்தை இல்லை என்பதை அறிந்த பெற்றோர் பதறி தேடத் தொடங்கியுள்ளனர். வனத்துறை எச்சரிக்கையாக இருந்து அதிர்ஷ்டவசமாக குழந்தையை காப்பாற்றியது.  முதலுதவிக்காக ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.

சிறு காயங்களுடன் இருந்த குழந்தை அதன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சாலையில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. சோதனைச் சாவடியில் பணிபுரியும்  ஊழியர் ஏதோ ஒன்று ஊர்ந்து செல்வதைக் கண்டு அதனை பார்க்க  அருகில் சென்று உள்ளார். அது  ஒரு குழந்தை என்பதை உணர்ந்த ஊழியர், வனவிலங்குகளின் வார்டன் உள்ளிட்ட வனத்துறையின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உள்ளார்.

மூணாறு  வனச்சரக  வார்டன் ஆர்.லெக்ஷ்மி கூறும் போது,மூணாறில் உள்ள ராஜமலா சோதனைச் சாவடியில் டிக்கெட் கவுண்டருக்கு குழந்தை ஊர்ந்து சென்றபோது இரவு 10 மணியளவில் இருக்கும்.  நான்  சென்றபோது, குழந்தையின்  தலை மற்றும் நெற்றியில் சிறு காயங்களும், மூக்கில் இரத்தமும் இருந்தன. நாங்கள் போலீசை  அழைத்தோம், குழந்தையை முதலுதவிக்காக பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். குழந்தை  ஒரு சங்கிலி மற்றும் வளையல்களும் அணிந்து இருந்தது. வெளிச்சத்தைப் பார்த்து குழந்தை டிக்கெட் கவுண்டரை நோக்கி வந்திருக்க வேண்டும் என கூறினார்.

அதிகாரிகள் முதலில் குழந்தையை தவறி விட்டதாக  நினைத்தார்கள், ஆனால் சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது, குழந்தை  ஜீப்பில் இருந்து விழுந்ததைக் கண்டனர். இரவு 9.42 மணியளவில், ஜீப் ஒரு திருப்பத்தில் திரும்பும் போது  குழந்தை தூங்கிய தாயின் மடியில் இருந்து விழுந்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory