» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவையில் பெண்ணிடம் ஆபாசமாகப் பேசிய காவலர் பணியிடை நீக்கம்

புதன் 11, செப்டம்பர் 2019 3:42:52 PM (IST)

கோவையில் மதுபோதையில் பெண்ணிடம் ஆபாசமாகப் பேசியதாக காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த 35 வயதுப் பெண் நேற்று கீரணத்தம் பகுதியில் உள்ள தனது உறவினர்களைப் பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அத்திப்பாளையம் அடுத்துள்ள டாஸ்மாக் கடை அருகே வந்தபோது காவலர் ஒருவர் சீருடையில் பின்தொடர்ந்து வருவதைக் கண்டு பயந்த அந்தப் பெண், வேகமாகச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை முந்திச் சென்று வழிமறித்த காவலர், "எங்கே செல்கிறீர்கள், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்," என பேசத் தொடங்கி பின் தவறாகப் பேசியுள்ளார்.

இதனால் அச்சமடைந்த அப்பெண், அத்திப்பாளையம் பகுதியிலுள்ள ஒரு பேன்சி ஸ்டோரில் தஞ்சம் அடைந்தார். அங்கும் வந்த காவலர், தகாத வார்த்தையில் பேசியுள்ளார். இதற்கிடையே, அப்பெண் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த அவரது கணவர் மற்றும் நண்பர்கள் காவலரைக் கண்டித்தபோது அவர் மது போதையில் இருப்பதும், அவர் பெயர் பிரபாகரன், பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளரின் வாகன ஓட்டுநர் எனவும் தெரியவந்தது

பின்னர், சீருடையில் இருப்பதால் அடிக்காமல் விடுகிறோம் என்று கூறி, காவலர் பிரபாகரனை கோவில்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் கூறும்போது, "சம்பந்தப்பட்ட காவலர் பிரபாகரன் இன்று (செப்.11) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது," என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory