» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை தலைமை செயலகத்தில் திடீரென புகுந்த நல்ல பாம்பு: ஊழியர்கள் அச்சம்

புதன் 11, செப்டம்பர் 2019 5:24:16 PM (IST)

சென்னை தலைமை செயலகத்தில் நல்ல பாம்பு திடீரென புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர்.

சென்னை தலைமை செயலக வளாகத்துக்குள் அடிக்கடி பாம்புகள் வருவதுண்டு.  அந்தவகையில், தலைமை செயலகத்தை சுற்றிலும் நிறைய மரங்கள், புதர்கள் உள்ளதால் இப்படி பாம்புகள் அடிக்கடி படையெடுத்து வருவது வாடிக்கையாகி விட்டது. பாம்புகள் தலைமைச்செயலகத்தில் நுழைந்து விடுவதால்  தலைமை செயலக ஊழியர்களிடையே அடிக்கடி பரபரப்பும், பீதியும் ஏற்பட்டு விடும்.

அந்தவகையில், இன்று தலைமை செயலக வளாகத்தின் 4-வது நுழைவாயிலில் படமெடுத்தபடி ஒரு நல்ல பாம்பு கிடந்ததை கண்டதும், ஊழியர்கள் தலைதெறிக்க ஓடினார்கள். இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த நல்ல பாம்பு அங்குள்ள புதருக்குள் நுழைந்துவிட்டதால், அதனை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory