» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு : ரயில் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன

வியாழன் 12, செப்டம்பர் 2019 9:07:22 AM (IST)

பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்வதற்கான ரயில் டிக்கெட் முன் பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. 

தீபாவளி, பொங்கல் பண்டிகைககளின் போது  சென்னை மற்றும் பிற பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால் ரயில்கள், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலை மோதும். ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களாக நீட்டிக்கப்பட்டதையடுத்து,  ஜனவரி 10ம் தேதி பயணிப்பதற்கான ரயில் டிக்கெட்டுகளை இன்று (செப்.12) முன்பதிவு செய்யலாம். இதனால், எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பொதுமக்கள் காத்திருந்து முன் பதிவு செய்தனர்.  காலை  8 மணிக்கு முன் பதிவு துவங்கியதும், ஆர்வத்துடன் பயணிகள் டிக்கெட்டுகளை புக்கிங் செய்ய துவங்கினர். 

ஆனால், சில நிமிடங்களிலேயே தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.  ஜனவரி 11ம்தேதிக்கான முன்பதிவு செப்.13ம் தேதியும், ஜனவரி 12ம் தேதிக்கான முன்பதிவு செப்.14ம் தேதியும், ஜனவரி 13ம் தேதி (திங்கட்கிழமை) முன்பதிவு செப்.15ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். பொங்கலுக்கு முந்தைய நாள் ஜனவரி 14-ம் தேதிக்கான முன்பதிவு செப்.16ம் தேதி தொடங்கும்.அதேபோன்று சொந்த ஊரில் இருந்து திரும்பும் போது, ஜனவரி 17-ம் தேதிக்கான முன்பதிவு செப்.19ம் தேதியும், ஜனவரி 18ம் தேதிக்கான முன்பதிவு செப்.20ம் தேதியும், ஜனவரி 19ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முன்பதிவு செப்.21ம் தேதியும் தொடங்கும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory