» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறுமியை கொடுமைப்படுத்தியதாக னுப்பிரியா மீது குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு

வெள்ளி 20, செப்டம்பர் 2019 12:12:48 PM (IST)

நடிகை பானுப்பிரியா வீட்டில் வேலை பார்த்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது பாண்டிபஜார் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

தியாகராயநகர் விஜயராகவா சாலையில் உள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசிக்கும் நடிகை பானுப்பிரியா வீட்டில், ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டம் பெத்தபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி வேலை செய்தார். பானுப்பிரியா வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம், ஐ-பேடு, கேமரா, இரு விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஆகியவை அண்மையில் திருடப்பட்டது. இதில் அவர் வீட்டில் வேலை செய்யும் அந்த சிறுமியும், அவரது தாயும் சேர்ந்து அந்த நகையை திருடியிருப்பது பானுப்பிரியா குடும்பத்தினருக்கு தெரியவந்தது.

இந்நிலையில் அந்தச் சிறுமியின் தாயார், தனது மகளை பானுப்பிரியா குடும்பத்தினர் வன்கொடுமை செய்ததாக ஆந்திர மாநில காவல்துறையில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் பானுப்பிரியா குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து பானுப்பிரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணன், சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் அந்த சிறுமியும், தாயும் தங்கநகை மற்றும் பொருள்களை திருடியது தொடர்பாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த சிறுமியின் தாயிடம் விசாரணை செய்தனர். விசாரணையின் இறுதியில் அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது பாண்டிபஜார் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துனர். தனது வீட்டில் சிறுமியை பணிக்கு அமர்த்திய புகாரில் குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory