» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பழநி பஞ்சாமிர்த கடை உரிமையாளர் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை

வெள்ளி 20, செப்டம்பர் 2019 3:45:26 PM (IST)

புகழ்பெற்ற பழநி பஞ்சாமிர்த கடை உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று மீண்டும் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பஞ்சாமிர்தம் விற்பனைக் கடைகளில் ஆகஸ்ட் மாத இறுதியில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  பழனி அடிவாரம் பகுதியில் பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி விற்பனை செய்யும் கடைகளில் இரண்டு நாட்களுக்கும் மேலாக வருமானவரித் துறை மற்றும் வருமானவரி புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

கடைகளில் மட்டுமின்றி,  சார்பு நிறுவனங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த சோதனையில் சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.சோதனையின் போது ரூ.90 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இன்று மீண்டும் சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory