» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பொறுப்பு நீதிபதி நியமனம்: தஹில ராமாணீ ராஜிநாமா ஏற்பு

சனி 21, செப்டம்பர் 2019 12:46:46 PM (IST)

தலைமை நீதிபதி தஹில ராமாணீ ராஜிநாமா கடிதம் குடியரசுத் தலைவரால் ஏற்கப்பட்டுள்ளதையடுத்து மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீயை, மேகாலய மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமித்தும், மேகாலய மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஏ.கே.மிட்டலை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமித்தும் உச்ச நீதிமன்ற தலைமைத் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) மத்திய அரசுக்குப் ஆகஸ்ட் 28-ஆம் தேதி பரிந்துரை செய்தது. 

இந்த நிலையில் தனது பணி இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ உச்ச நீதிமன்ற கொலீஜியத்திடம் கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால் பணியிட மாற்றத்துக்கு அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ, செப். 6-ஆம் தேதி பதவியை ராஜிநாமா செய்தார். இதனிடையே தஹில ராமாணீ இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து செப்.18-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில ராமாணீ ராஜிநாமா கடிதம் குடியரசுத் தலைவரால் ஏற்கப்பட்டதாக மத்திய சட்ட அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இதையடுத்து மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory