» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விக்ரவாண்டியில் திமுக, நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சனி 21, செப்டம்பர் 2019 3:25:05 PM (IST)

விக்ரவாண்டியில் திமுக, நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிடும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். 

இந்நிலையில், நாங்குநேரியில் எந்த கட்சி போட்டியிடுவது என்பது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, விக்ரவாண்டியில் திமுக போட்டியிடும், நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும். விக்ரவாண்டியில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் இருந்து திங்கள்கிழமை விருப்பமனு பெறப்படும். இதையடுத்து திமுக வேட்பாளர் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory