» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் : அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

புதன் 9, அக்டோபர் 2019 12:42:13 PM (IST)

தமிழகத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபைத் தொகுதிகளான நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், விக்கிரவாண்டி அருகே மேல்காரணையில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழகத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும் என்று கூறியதுடன், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான மனுக்களும் டில்லியில் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டே முடிவடைந்த நிலையில், 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. சமீபத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory