» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மு.க.ஸ்டாலின் எடுத்துவிடும் புளுகுகளை நம்ப தமிழக மக்கள் முட்டார்களா? நமது அம்மா கடும் விமர்சனம்!!

புதன் 9, அக்டோபர் 2019 5:23:24 PM (IST)

மு.க.ஸ்டாலின் எடுத்துவிடும் புளுகுகளை நம்ப தமிழக மக்கள் ஒன்றும் பித்து பிடித்து போகவில்லை என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா விமர்சித்துள்ளது.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில், "அடகு வைத்த நகையும், இட ஒதுக்கீடு வலையும்" என்ற தலைப்பில் ஒரு விமர்சனம் வெளியாகியுள்ளது. அதில், வாக்குறுதியை நிறைவேற்ற வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஒரு கணமும் யோசிக்காமல் அள்ளிவிடுவது, ஆசை வலை விரிப்பது மதிகெட்ட திமுகவுக்கு தேர்தல் விதியாகவே போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் அடகுவைத்த 5 சவரன் நகையை திருப்பி தருவோம், மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்வோம், கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன்களை ரத்து செய்வோம் என அள்ளிவிட்ட பொய்களை என்னாச்சு என மக்கள் கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில், திருவாளர் துண்டுச்சீட்டு இட ஒதுக்கீடு என்ற புதிய வலையை விரிக்க பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் எடுத்துவிடும் புளுகுகளை நம்ப தமிழக மக்கள் ஒன்றும் பித்து பிடித்து போகவில்லை என்றும், திமுக ஆட்சிக்கு வர வேண்டாம் என்பதில் மக்கள் தெளிவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory