» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு? இன்ஜினீயரிங் மாணவி, காதலனுடன் சயனைடு தின்று தற்கொலை

வியாழன் 10, அக்டோபர் 2019 10:47:17 AM (IST)

சேலத்தில்  காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் இன்ஜினீயரிங் மாணவி, காதலனுடன் சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் செவ்வாய்பேட்டை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி. வெள்ளிப் பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய மகன் சுரேஷ் (22). இவர் தந்தையுடன் சேர்ந்து வெள்ளி தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டைவிட்டு வெளியே சென்ற அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. மேலும் அவருடைய செல்போன் ‘சுவிட்ச் ஆப்‘ செய்யப்பட்டு இருந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். கோபியின் கார் நிறுத்தும் இடம் ஜவுளிக்கடை பஸ் நிறுத்தம் அருகே உள்ளது. அங்கு சென்று பார்த்த போது காருக்குள் சுரேஷ் பிணமாக கிடந்தார். 

சுரேஷ் உடல் அருகே இளம்பெண் ஒருவரும் பிணமாக கிடந்தார். இதை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் சுரேசுடன் இறந்து கிடந்த பெண், குகை மாரியம்மன் கோவிலை சேர்ந்த இன்ஜினீயரிங் மாணவியான ஜோதிகா(20) என்று தெரியவந்தது. இதையடுத்து 2 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: சுரேசும், சேலம் அருகே ஒரு தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்த ஜோதிகாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சுரேஷ் வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவர். ஆனால் ஜோதிகாவின் தந்தை வெள்ளி தொழில் மற்றும் துணி வியாபாரம் செய்து வருகிறார். இதனால் இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும் பெற்றோர்களுக்கு தெரியாமல் அவர்கள் இருவரும் சந்தித்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் ஜோதிகாவை வெளியில் செல்ல பெற்றோர் தடை விதித்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில் நேற்று முன்தினம் சுரேசும், ஜோதிகாவும் கார் நிறுத்தும் இடத்தில் சந்தித்து நீண்ட நேரமாக பேசி உள்ளனர். அப்போது காதலுக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு தெரிவிப்பதால் மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்வது என்று முடிவு செய்திருக்கலாம். இதையடுத்து 2 பேரும் வெள்ளி தொழிலுக்கு பயன்படுத்தப்படும் சயனைடை தின்று தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதுகிறோம். ஆனாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் அவர்கள் எப்படி தற்கொலை செய்து கொண்டார்கள்? என்பது குறித்த முழு விவரம் தெரியவரும். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.


மக்கள் கருத்து

அருண்Oct 12, 2019 - 09:23:09 AM | Posted IP 106.2*****

அப்புடி புனிதமான காதலா இருந்தா மேட்டர் பண்ணாம செத்து இருக்கலாமே. நாடோடிகள் படம் மாதிரிதான் போல எல்லாம்.

அருண்Oct 10, 2019 - 02:04:42 PM | Posted IP 106.1*****

அவ்ளோ வெறி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory