» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாட்டு வெடிகுண்டு வீசி பெண்ணைக் கொல்ல முயற்சி: சென்னையில் பட்டப்பகலில் பரபரப்பு

வியாழன் 10, அக்டோபர் 2019 5:43:02 PM (IST)

சென்னையில் பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டு வீசி பெண்ணைக் கொல்ல நடந்துள்ள முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சிந்தாதிரிபேட்டை ரிச்சி தெருவில் வியாழன்  மதியம் ஒரு பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டியும் நாட்டு வெடிகுண்டு வீசியும் கொல்ல முயன்றது.  பின்னர் அங்கிருந்து அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது.  இதுதொடர்பாக நடந்த விசாரணையில் அந்தப் பெண் அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி ஒருவரின் முன்றாவது மனைவி என்று தெரிய வந்தது. 

மிகவும் பரபரப்பாகக் காணப்படும் சாலையில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்  சீன அதிபர் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த கொலை முயற்சி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory