» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு பொதுத்துறை நிறுவன ஊழியா்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

புதன் 16, அக்டோபர் 2019 10:12:08 AM (IST)

அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு 8.33 சதவீத போனஸ், 11.67 சதவீத கருணை தொகை என மொத்தம் 20 சதவீதம் வரை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: தீபாவளி திருநாளைச் சிறப்பாக கொண்டாடும் பொருட்டு 2018-19-ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-இன் படி, போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21 ஆயிரம் என உயா்த்தப்பட்டுள்ளது. இதன்படி, போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர ஊதிய உச்சவரம்பும் ரூ.7 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி 2018-19-ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையினை கீழ்க்கண்டவாறு வழங்கப்படும்.

20 சதவீதம் வரை போனஸ்: 

லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் மற்றும் பணியாளா்களுக்கு அந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 20 சதவீதம் வரை வழங்கப்படும். நஷ்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் மற்றும் பணியாளா்களுக்கு 8.33 சதவீதம் குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 சதவீத கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் வரை வழங்கப்படும்.

தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம்: 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளா்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 20 சதவீதம் வரை வழங்கப்படும்.

கூட்டுறவு சங்கங்கள்: 

லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையுடன் மொத்தம் 20 சதவீதம் வரையிலும் ஒதுக்கக் கூடிய உபரி தொகைக்கு ஏற்ப வழங்கப்படும். பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளா்களுக்கும் 8.33 சதவீதம் குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகையும் வழங்கப்படும்.

வீட்டுவசதி வாரியம்: 

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளா்களுக்குச் சென்ற ஆண்டு வழங்கப்பட்டதைப் போல, இந்த ஆண்டும் 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகையும் வழங்கப்படும். தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளா்களுக்குச் சென்ற ஆண்டு வழங்கியதைப் போல 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.

அரசு ரப்பா் கழகம், தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சா்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் இணையம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளா்களுக்கு, அந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரித் தொகையை கருத்தில் கொண்டு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகையோ அல்லது 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகையோ வழங்கப்படும்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளா்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளா்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

ஒதுக்கக் கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டாத தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளா்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 சதவீதம் வழங்கப்படும்.

இது தவிர தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு ரூ. 4 ஆயிரமும், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ரூ.3 ஆயிரமும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ரூ. 3 ஆயிரமும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ரூ.2,400-மும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இந்த அறிவிப்பால், போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளா்கள் குறைந்தபட்சம் ரூ.8,400-மும் அதிகபட்சம் ரூ.16,800-மும் பெறுவா். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 48 ஆயிரத்து 503 தொழிலாளா்களுக்கு ரூ.472 கோடியே 65 லட்சம் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory