» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜய் நடித்துள்ள பிகில் படத்துக்கு தடை கேட்டு வழக்கு : இயக்குனர், தயாரிப்பாளர் பதில் அளிக்க உத்தரவு

புதன் 16, அக்டோபர் 2019 11:08:02 AM (IST)

விஜய் நடித்துள்ள பிகில் படத்துக்கு தடை கோரிய வழக்கில் இயக்குனர், தயாரிப்பாளர் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது..

சென்னை உயர்நீதிமன்றத்தில், செல்வா என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து 256 பக்கங்கள் கொண்ட கதை ஒன்றை எழுதினேன். இந்த கதையை தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்திலும் பதிவு செய்துள்ளேன். இதை படமாக்க வேண்டும் என்பதற்காக பல தயாரிப்பாளர்களிடம் கதை சொன்னேன். இந்நிலையில், நடிகர் விஜய், நயன்தாரா உள்பட பலர் நடித்துள்ள பிகில் என்ற திரைப்படத்தை இயக்குனர் அட்லீ இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதை என்னுடையது. 

இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படம் வெளியானால், எனக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, இந்த படத்தின் கதை என்னுடையது என்று அறிவிக்க வேண்டும். அதுவரை இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி படத்தை தயாரித்துள்ள நிறுவனத்துக்கும், இயக்குனர் அட்லீக்கும் உத்தரவிட்டார். விசாரணையை இன்று (புதன்கிழமைக்கு) தள்ளிவைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory