» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வாகன சோதனையின்போது தம்பதியிடம் ஒழுங்கீனம்: எஸ்ஐ - போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம்

புதன் 16, அக்டோபர் 2019 11:20:33 AM (IST)சிதம்பரத்தில் வாகன சோதனையில் தம்பதியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் ஆகியோரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டார்.

சிதம்பரம் கஞ்சித்தொட்டி அருகில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், போலீஸ்காரர் மரியசார்லஸ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியை நிறுத்தி, ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் தான் பயணம் செய்ய வேண்டும். ஏன் 2 குழந்தைகளையும் அழைத்து வந்தீர்கள்?, 4 பேர் வந்தது தவறு என்று அபராத தொகையை செலுத்தும்படி கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பதிலுக்கு போலீசாரும், அந்த தம்பதியிடம் தவறான வார்த்தைகளை கூறி, ‘ஹெல்மெட்’ அணியாதது ஏன்?, ஒரிஜினல் ஆர்.சி.புக், லைசென்ஸ் கொண்டு வராதது ஏன்? என்று அடுத்தடுத்து கேள்வி கணைகளை தொடுத்து தம்பதியை கலங்கடித்தனர். அந்த தம்பதி மன்னிப்பு கேட்டும் போலீசார் விடவில்லை. இந்த சம்பவம் முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் வைரலாகியது. வாகன சோதனையில் போலீஸ்காரர்களுக்கும், தம்பதியருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் வாகன சோதனையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சிதம்பரம் நகர போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், போலீஸ்காரர் மரியசார்லஸ் ஆகியோரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

உண்மைOct 19, 2019 - 05:53:59 PM | Posted IP 162.1*****

போலீஸ்காரர்களுக்கு தண்டனையே கிடையாதாம் எப்போ பார்த்தாலும் இடமாற்றமாம்

கதிரெவேல் காளிமுத்து THOOTHUKUDIOct 18, 2019 - 01:13:00 PM | Posted IP 162.1*****

டூலே அச்டின் பட் SUPER

கே KALIMUTHUOct 18, 2019 - 01:11:51 PM | Posted IP 162.1*****

சூப்பர் ACTION

MASSOct 17, 2019 - 03:29:59 PM | Posted IP 108.1*****

டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory