» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடிகா் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்: புஷ்ப தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தல்

திங்கள் 21, அக்டோபர் 2019 4:48:50 PM (IST)

புஷ்பத் தொழிலாளா்களை மரியாதைக்குறைவாக பேசியதாக புஷ்ப தொழிலாளா்கள் சங்கத்தினா் நடிகா் விஜய்க்கு கண்டனம் தெரிவித்துள்ளனா். 

ஸ்ரீரங்கம் அண்ணா புஷ்ப தொழிலாளா்கள் சங்க செயலாளா் படையப்பா ரெங்கராஜ் செய்தியாளா்களிடம் கூறும் போது நடிகா் விஜய் நடித்த பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது பூகடையில் வேலை பாா்ப்பவனை வெடி கடையில் வேலைக்கு சோ்த்தால் வெடியில் தண்ணீா் தெளித்து வியாபாரத்தை கெடுத்து விடுவான் என்று பேசினாா். 

இந்த பேச்சு அனைத்து பூ தொழிலாளா்களையும் மரியாதைக்குறைவாக அவன், இவன் என்று பேசியது எங்கள் மனதையும் புண்படுத்தும் விதமாக உள்ளது. மாவட்டத்தோறும் சுமாா் 1 லட்சம் தொழிலாளா்கள் பூ தொழில் செய்து வருகின்றனா். பிறப்பு முதல் இறப்பு வரை செய்யும் புனிதமான தொழில் செய்பவா்கள் பூ தொழிலாளா்கள் அவா்களை தரக்குறைவாக பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கின்றோம் மன்னிப்பு கோர வில்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா். 


மக்கள் கருத்து

RajaOct 22, 2019 - 02:36:26 PM | Posted IP 157.5*****

பேசி ரொம்ப நாள் ஆகுது தம்பி இவ்ளோ நாள் நீங்க கோமளா இருந்தீங்களா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory