» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் : நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார்

திங்கள் 21, அக்டோபர் 2019 5:19:02 PM (IST)நாகை மாவட்டத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடுகளை வழங்கினார்.

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர்,  நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஆண்டு கஜா புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. மின்சாரம் தடைபட்டதுடன், விவசாயிகளும் வாழ்வாதாரத்தை இழந்தனர். குடிசைகள், ஓடுகள் வேயப்பட்ட வீடுகளில் வசித்தோர் முற்றிலும் தங்களது வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்தனர். இதனிடையே, கஜா புயல் பாதித்த பகுதிகளில் மறுகட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு  பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் 10 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக இலவசமாக வீடு கட்டித் தரப்படும் என நடிகர் ரஜினி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இதுதொடர்பான பணிகள் கடந்த 6 மாதமாக நடைபெற்று வந்தன. தற்போது அந்த பணிகள் நிறைவுபெற்ற நிலையில் பயனாளர்கள் 10 பேரை சென்னை போயஸ் இல்லத்திற்கு அழைத்து வீட்டிற்கான சாவியை நடிகர் ரஜினிகாந்த் இன்று வழங்கினார். அத்துடன் குத்துவிளக்கு ஒன்றையும் அவர் கொடுத்துள்ளார். 


மக்கள் கருத்து

மெய்யன்Oct 23, 2019 - 12:04:09 AM | Posted IP 162.1*****

Magizchi

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory