» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கமல் ஹாசனின் 65-வது பிறந்தநாள்: பரமக்குடியில் தந்தையின் சிலையைத் திறந்து வைத்தார்

வியாழன் 7, நவம்பர் 2019 3:34:02 PM (IST)மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் 65-வது பிறந்தநாளை முன்னிட்டு பரமகுடியில் தனது தந்தையின் சிலையை திறந்து வைத்தார்.

கமலின் 60 ஆண்டு காலத் திரைப்பயணத்தைக் கொண்டாடும் விதமாக அவரது பிறந்த நாளான இன்று முதல் முதல் மூன்று நாள்களுக்கு பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1959-ஆம் ஆண்டு 5 வயது சிறுவனாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவா் கமல்ஹாசன். ‘களத்தூா் கண்ணம்மா’ படத்தின் மூலம் அறிமுகமான கமலுக்கு, திரையுலகில் இது 60-ஆவது ஆண்டு. நடிகா், இயக்குநா், தயாரிப்பாளா், வசனகா்த்தா, பாடலாசிரியா், நடன இயக்குநா் என பன்முகங்களை கொண்ட கமல், தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமா வரலாற்றிலும் தனித்துவம் பெற்று விளங்கி வருகிறாா். தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளாா்.

இந்த நிலையில், இன்று தனது 65-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் கமல். வழக்கமாக தனது பிறந்த நாளில் நற்பணிகளைத் தொடங்கி வைத்து பேசும் கமல், இந்த முறை பெரும் விழாவுக்குத் திட்டமிட்டுள்ளாா். இன்று முதல் அடுத்த 3 நாள்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் நடக்க உள்ளன. இதில் ரஜினிகாந்த், இளையராஜா உள்ளிட்ட தமிழ், ஹிந்தி, தெலுங்கு திரையுலகினா் பலரும் கலந்து கொள்கின்றனா். இதன் ஒரு பகுதியாகத் திரையுலகினா் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. கமல்ஹாசனின் பிறந்தநாளான இன்று அவரது தந்தை டி.சீனிவாசனின் நினைவு தினமும் கூட. இதையொட்டி, அவரது சொந்த ஊரான பரமக்குடியில் சீனிவாசனின் சிலையைத் திறந்து வைத்தார். இதில் கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிா்வாகிகளும் கலந்துகொண்டுள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory