» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கமலை ஜனாதிபதியாக பார்க்க ஆசைப்படுகிறேன் : நடிகர் பிரபு பேச்சு

வியாழன் 7, நவம்பர் 2019 3:55:36 PM (IST)கமலை ஜனாதிபதியாக பார்க்க ஆசைப்படுவதாக பரமக்குடியில் நடைபெற்ற விழாவில் நடிகர் பிரபு கூறினார். 

கமல்ஹாசனின் தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர் பிரபு பேசியதாவது:- நடிப்புலகில் கமல் திறமை பெற்றவர். அவரை அன்பால் எளிதில் வென்று விடலாம். 5 வயது முதல் நடிக்க தொடங்கி இன்று 60 வயதாகி விட்டதாக சொல்கிறார்கள். பார்த்தால் அப்படியா தெரிகிறது?. அவர் என்றும் மாஸ்டர் கமல்ஹாசன். அப்பாவு சிவாஜிக்கு கமல் மீது அளவு கடந்த பிரியம் உண்டு. எனது திரையுலக வாரிசு கமல்தான் என்று கூறி உள்ளார்.

தொழில்நுட்ப விஷயங்கள் அனைத்தையும் கற்றுக்கொண்டு என்னைவிட அதிக திறமையுடன் கமல் விளங்கி வருவதாக அப்பா கூறினார். எங்கள் குடும்பம் மிகவும் பெரியது. அதுபோல் கமல் குடும்பமும் பெரியது. அண்ணனை தற்போது குடும்பத்துடன் பார்ப்பது மிகுந்த சந்தோசமாக உள்ளது. அவர் மனதுக்குள் என்ன நினைப்பார் என்பது எனக்கு தெரியும். கமல் மென்மையானவர். நீங்கள் (ரசிகர்கள்) அன்பு காட்டுவதுபோல் நானும் அன்பு காட்டுகிறேன். கமலை ஜனாதிபதியாக பார்க்க ஆசைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory