» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜேப்பியார் கல்வி குழுமத்தில் வருமான வரிதுறை சோதனை: 25க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி!!

வியாழன் 7, நவம்பர் 2019 4:06:00 PM (IST)

சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்வி குழும நிறுவனங்களில்  வருமான வரி துறை சோதனை நடந்து வருகிறது.

சென்னையில் ஜேப்பியார் கல்வி குழுமத்தின் சார்பில் பள்ளி கூடங்கள், கல்லூரிகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அவரது கல்வி குழுமத்தில் இன்று காலை முதல் வருமான வரி துறை சோதனை நடந்து வருகிறது. சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்கள் உள்பட 25க்கும் மேற்பட்ட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  எனினும், இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அல்லது பணம் பற்றிய விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory