» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜய், ரஜினி, கமல் கூட்டணி சேர்ந்தாலும் அதிமுக எதிர்கொள்ளும் : கே.டி.ராஜேந்திர பாலாஜி கருத்து

செவ்வாய் 19, நவம்பர் 2019 10:22:29 AM (IST)

விஜய், ரஜினி, கமல் கூட்டணி சேர்ந்தால் அவற்றை எதிர்கொள்ளும் அளவுக்கு அதிமுக பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்கும் என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

விருதுநகரில் நேற்று அவர் கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக ஆலோசனை கூட்டத்தில், அதிமுக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களைத்தான் தாக்குவோம் என்றுதான் கூறினேன். வன்முறையை தூண்டும் நோக்கில் கூறவில்லை. பாஜகவுடன் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தொடருமா என்பது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும். நடிகர் சிவாஜி கணேசன் பற்றி முதல்வர் பேசிய கருத்து திரித்து கூறப்பட்டு வருகிறது. அமமுகவில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் இல்லை.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் கூறியது பொதுவான கருத்துதான். அவர் ஒரு ஆன்மீகவாதி. நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அதிசயம் எப்பொழுது வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியலில் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம். விஜய், ரஜினி, கமல் கூட்டணி சேர்ந்தால் அவற்றை எதிர்கொள்ளும் அளவுக்கு அதிமுக பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்கும். நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வந்தால் முன்னோடியாக விளங்க வாய்ப்புள்ளது. நாளை என்ன நடக்கும் என யாருக்கு தெரியும். பாட்ஷா படம் வெளியானபோது ரஜினி கட்சியை ஆரம்பித்து இருந்தால் அவர் ஆட்சியை பிடித்திருப்பார். காலம் தாழ்த்தி விட்டார் ரஜினி. இனி வரும் தேர்தல்களில் பணத்தை வைத்து மட்டும் வெற்றிபெற முடியாது. மக்களின் ஆதரவு வேண்டும் என்றார்.


மக்கள் கருத்து

இவன்Nov 19, 2019 - 10:52:37 AM | Posted IP 108.1*****

அது இருக்கட்டும் .. முதல்ல அந்த கூத்தாடியை அரசியல்ல குதிக்க சொல்லுங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory