» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரீல் தலைவர்களுக்கு மத்தியில், எடப்பாடியார் ஒரு ரியல் தலைவர்- அதிமுக நாளிதழ் விமர்சனம்!!
செவ்வாய் 19, நவம்பர் 2019 5:06:13 PM (IST)
ஒரு சினிமாவில் நடித்துவிட்டு, மறு சினிமா வாய்ப்பு வருவதற்கு முன்பே முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில், எடப்பாடியார் ஒரு ரியல் தலைவர் என நடிகர் ரஜினியை அதிமுக நாளேடு விமர்சித்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் எடப்பாடியை ரஜினி சீண்டியபிறகு இன்று (நவம்பர் 19) வெளியான அதிமுகவின் அதிகாரபூர்வமான நாளிதழ் நமது அம்மா "ரஜினி ரீல் தலைவர், எடப்பாடி ரியல் தலைவர்" என்று குறிப்பிட்டு பதில் கட்டுரை வெளியாகியுள்ளது. குத்தீட்டி என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்தக் கட்டுரையில், "முதலமைச்சர் பதவி என்பது தான் எடுக்கும் சினிமாக்களில் முதல் சீனில் ஆசைப்பட்டு மூன்றாவது காட்சியிலேயே கைக்கு எட்டிவிடுகிற கற்பனை நாற்காலி அல்ல என்பதை கமல்ஹாசனுக்கு ரஜினி சுட்டிக் காட்டியிருக்கும் மறைமுக அறிவுரையாகவே தோன்றுகிறது.
கூடவே, தான் முதலமைச்சர் ஆவேன் என்று எடப்பாடி கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் என்றும் சொல்லியிருக்கிறார் ரஜினி. உண்மைதான் கண்டக்ட்ராக வாழ்க்கையைத் தொடங்கிய நீங்களும் கன்னித் தமிழ் பூமியின் சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டீர்கள். ஆனாலும் காலம் கொடுக்கும் வாய்ப்பை கண்ணியம் குன்றாத கடுமையான உழைப்பால் தமதாக்கிக் கொள்பவர்கள்தான் தலைவர்களாக, அறிஞர்களாக தடம் பதித்து உலக சரித்திரத்தில் இடம்பிடிக்கிறார்கள்.
அப்படித்தான் எடப்பாடியும் படிப்படியாய் உழைத்து தான் கொண்ட இயக்கத்தின் மீது குன்றாத விசுவாசத்தை பதித்து சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக, அதன் பிறகு இன்று தமிழகத்தின் முதலமைச்சராக உயர்ந்து ஒரு தொண்டனாலும் தலைவராக முடியும், முதல்வராக முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்” என்று ரஜினிக்கு பதில் அளித்திருக்கும் நமது அம்மா கட்டுரை அடுத்த பத்திகளில் சூடான சொற்களை வீசியிருக்கிறது.
"ஒரு சினிமாவில் நடித்துவிட்டு, மறு சினிமா வாய்ப்பு வருவதற்கு முன்பே முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில், எடப்பாடியார் ஒரு ரியல் தலைவர் என்பதை உணர்த்துகிற வரலாறு இது. எப்படியாயினும் மாற்றாரும் போற்றும் சாதனை சரித்திரத்தை கழகம் நாளையும் படைக்கும்.நீங்கள் சுட்டிக்காட்டுகிற அதிசயம் இதுதான்” என்று அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னையில் பாத்ரூம் என நினைத்து மாடியில் இருந்து குதித்தவர் உயிரிழப்பு
வியாழன் 12, டிசம்பர் 2019 7:59:21 PM (IST)

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் கருணாஸ் சந்திப்பு: உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு
வியாழன் 12, டிசம்பர் 2019 5:35:41 PM (IST)

குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த வாலிபர் திருச்சியில் கைது: இந்தியாவிலேயே முதன்முறை!!
வியாழன் 12, டிசம்பர் 2019 5:14:39 PM (IST)

எகிப்து வெங்காயத்தை முதல்வரே பரிசோதனை செய்துள்ளார்: அமைச்சர் செல்லூர் ராஜு
வியாழன் 12, டிசம்பர் 2019 4:41:59 PM (IST)

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
வியாழன் 12, டிசம்பர் 2019 4:15:08 PM (IST)

ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம்: தட்டிக்கேட்ட இளைஞர் கொலை - விருதுநகரில் பரபரப்பு!!
வியாழன் 12, டிசம்பர் 2019 4:02:23 PM (IST)
