» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல்: விருப்பமனு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு - திமுக அறிவிப்பு

செவ்வாய் 19, நவம்பர் 2019 5:28:14 PM (IST)

உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுக தோழர்கள் உரிய விண்ணப்பப் படிவத்தை மாவட்டக் கழகத்திலிருந்து பெற்று, தாம் போட்டியிட விரும்பும் பொறுப்பு மற்றும் தம்மைப் பற்றிய விவரங்களை அந்தப் படிவத்தில் குறிப்பிட்டு 2019 நவம்பர் 20 வரை மாவட்டக் கழக அலுவலகத்தில் அல்லது தலைமைக் கழகத்தில் உரிய கட்டணத்துடன் வழங்கிட வேண்டுமென  ஏற்கனவே 11-11-2019 அன்று வெளியிட்ட தலைமைக் கழக அறிவிப்பினைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்ட திமுக செயலாளர்கள் கால அவகாசம் நீட்டித்திட வேண்டுகோள் வைத்ததன் அடிப்படையில், 27-11-2019 (புதன்கிழமை) வரை, விருப்ப மனு தாக்கல் செய்திட அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு க.அன்பழகன் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory