» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கல்லூரி முன் மாணவி தீக்குளித்து தற்கொலை: காதல் தோல்வியால் விபரீதம்

செவ்வாய் 19, நவம்பர் 2019 5:44:35 PM (IST)

கோவையில் காதல் தோல்வியால் கல்லூரி முன்பு நடுரோட்டில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார். 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சினேகா (19). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். சினேகா கல்லூரி விடுதியில் தங்கி உள்ளார். இவர் சொந்த ஊர் சென்று விட்டு இன்று அதிகாலை விடுதிக்கு திரும்பினார். இந்நிலையில் இன்று காலை 5.45 மணி அளவில் மாணவி சினேகா கல்லூரி விடுதி அருகே நடுரோட்டில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். 

அவரது அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி இன்று மதியம் இறந்தார். இதுகுறித்து பீளமேடு போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி சினேகா ஒருவரை காதலித்து வந்ததாகவும், அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory