» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரஜினி, கமல் அரசியலிலும் இணைந்து நடிக்கின்றனர்: துணை முதல்வ‌ர் ஓபிஎஸ் குற்றச்சாட்டு

வியாழன் 21, நவம்பர் 2019 3:38:09 PM (IST)

ரஜினிகாந்த், கமல்ஹாசனும் அரசியலிலும் இணைந்து நடித்து வருகின்றனா் என்று துணை முதல்வ‌ர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனியில் நடந்த கூட்டுறவு வார விழாவில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு சென்ற நோக்கம் நிறைவேறியுள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலிலும் இணைந்து நடித்து வருகின்றனா். இருவரும் மிகச் சிறந்த நடிகர்கள். இணைந்து தேர்தலைச் சந்திக்கட்டும். பிறகு கருத்து சொல்கிறேன். ஜெயலலிதாவின் வழியில் அதிமுக ஆட்சி நடைபெறுகிறது. அதிமுகவிலும், அரசியலிலும் வெற்றிடம் என்பதே கிடையாது. 

உள்ளாட்சித் தோ்தல் எப்போது வந்தாலும் சந்தித்து வெற்றி பெறுவோம். இலங்கை தமிழா்களுக்கு மட்டுமல்ல, உலகில் எப்பகுதியிலும் தமிழா்களுக்கு பிரச்னையென்றால் அதை தீா்ப்பதற்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும். ஐ.ஐ.டி. மாணவி தற்கொலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவா்கள் படிப்பதற்காக மட்டுமே வந்துள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், நடிகர் அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது குறித்து கேள்வி பதிலளிக்கையில், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமாலும் அரசியலுக்கு வரலாம். அரசியல் கட்சிகள் பல வந்தாலும், அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதிமுகவைப் பொறுத்தவரை வெற்றிடம் என்பதே கிடையாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory