» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்: சரத்குமார் வரவேற்பு

வியாழன் 21, நவம்பர் 2019 3:55:53 PM (IST)

மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்..

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கு  தமிழக அரசு பிறப்பித்த  சட்டம் வரவேற்கத்தக்கது. நேரடி தேர்தல் முறையும், மறைமுகத் தேர்தல் முறையும் நடைமுறையில் இருந்து வந்த நிலையில்,  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களால்  மறைமுகத் தேர்தல் நடத்தி மேயர் தேர்வு செய்யப்படுவது  சட்டத்திற்கு  உட்பட்ட தேர்தல் தான்  என்பதில் ஐயமில்லை.  

கடந்த 2006 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மறைமுக தேர்தல் நடத்தப்பட்டு தான் மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதால் புதிதானதொரு சட்டம் இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். மறைமுகத் தேர்தல் நடத்துவதால் அரசுக்கு செலவினங்களும் குறைக்கப்படும்,  மறைமுகத் தேர்தல் வாயிலாக மேயர் தேர்ந்தெடுக்கப்படுவதால் மக்களுக்காக ஏற்படுத்தப்படும்  திட்டங்கள்  பொதுமக்களை  சென்றடைவதற்கு  ஓர் இணக்கமான சூழலும் உருவாகி  எந்தவித  தடையின்றி நிர்வாகமும் சிறப்பாக செயல்படும் என்பதால்  மறைமுகத் தேர்தல் நடத்துவதை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வரவேற்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

அந்தோணி சாமிNov 22, 2019 - 08:02:36 AM | Posted IP 173.2*****

பாவம் சரத்குமார்

ஆசீர். விNov 21, 2019 - 03:59:30 PM | Posted IP 108.1*****

நீ என்னத்தை வரவேற்றாலும் சரி உனக்கு அஞ்சுபைசாக்கு பிரயோஜனம் கிடையாது. உனக்கோ உன் கட்சிக்கோ ஒரு இடம் கூட தரமாட்டாங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory