» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசியல் சுய இலாபத்திற்காகப் புலிகளின் பெயரைக் கொச்சைப்படுத்துவதா? திமுகவுக்கு சீமான் கண்டனம்
வியாழன் 21, நவம்பர் 2019 4:15:56 PM (IST)
அரசியல் சுய இலாபத்திற்காகப் புலிகளின் பெயரைக் கொச்சைப்படுத்துவதா? என்று டிஆர் பாலுவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆனால், அதற்கு விடுதலைப் புலிகள் பெயரைப் பயன்படுத்துவதும், அவர்களால் சோனியாவின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகக் குற்றஞ்சாட்டுவதும் அபாண்டமானது; அடிப்படையில்லாதது. விடுதலைப்புலிகளை அழித்து முடித்துவிட்டதாக இந்திய அரசே கூறியிருக்கிற நிலையில், அதற்கு விதிக்கப்பட்ட தடையே தேவையற்றது எனப் பல ஆண்டுகளாகக் கூறி வருகிறோம். அத்தடையின் மூலம் ஒட்டுமொத்த ஈழத்தமிழ்ச் சொந்தங்களையும் சந்தேகக்கண்ணோடு பார்ப்பது அவர்களுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்துகிறது எனக்கூறித்தான் தடை விலக்கைக் கோருகிறோம். இந்நிலையில், டி.ஆர்.பாலு பேசியிருப்பது எதிராளியின் நச்சுப்பரப்புரைக்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது.
ஈழ இனப்படுகொலையில் நேரடியாகத் தொடர்புடைய கோத்தபய ராஜபக்சே இலங்கையின் சனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் அரசியல் சூழலில் ஈழத்தமிழர்கள் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறார்கள். இந்த நேரத்தில் திமுகவின் பாராளுமன்ற குழுத்தலைவர் புலிகளால் ஆபத்து என்று பேசுவது ஏற்கனவே பல்லாண்டுகள் நெருக்கடியில் இருக்கும் ஈழத்தமிழர்கள், இன்னும் பல ஆண்டுகளுக்கு நசுக்கப்படும் சூழல் உருவாகப்போகிறது. கோத்தபய ராஜபக்சே வெற்றிக்குப் பிறகு ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதைப் போன்று அறிக்கை வெளியிட்டத் திமுகவின் தலைமை டி.ஆர். பாலுவின் இந்தப் பேச்சை ஏற்றுக்கொள்கிறதா? ஆமோதிக்கிறதா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
ஈழப்படுகொலைக்கு ஒரு பன்னாட்டுப்போர்க்குற்ற விசாரணையையும், ஒரு பொது வாக்கெடுப்பையும் கேட்டுப் பத்தாண்டுகளாக நாங்கள் போராடிக் கொண்டிருக்கையில் அதற்குரிய எவ்வித முன்னெடுப்பையும் செய்ய முன்வராத திமுக, தனது கூட்டணித் தலைவரை மனம்குளிர வைக்க அவரது பாதுகாப்புக்குப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தியிருப்பது மிகவும் கீழ்த்தரமான, சந்தர்ப்பவாத அரசியல்! திராவிடத்தின் இறுதி நம்பிக்கையெனக்கூறி, குறைந்த பட்ச திராவிடம் இருப்பதாகக்கூறி திமுகவை ஆதரிக்கிற திராவிட இயக்கத்தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், விடுதலைப்புலிகளுக்கு எதிரான திமுகவின் இந்நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்களா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
சிங்கள இனவாத கொடுமைகளுக்கு எதிராக நின்று தமிழினத்தின் காவல் அரணாக இருந்த விடுதலைப்புலிகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் கருத்துகளைத் தெரிவித்த திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உடனடியாகத் தனது கருத்துகளைத் திரும்பப் பெற்று, அதற்கு மன்னிப்புக்கோர வேண்டும். இல்லாவிடில், தேர்தல் களத்தில் தக்கப்பாடம் புகட்டுவோம் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாநில அரசு பணியாளர் நியமனத்துக்கு பொதுத் தகுதித் தேர்வு?- மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
ஞாயிறு 8, டிசம்பர் 2019 5:32:44 PM (IST)

உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு
ஞாயிறு 8, டிசம்பர் 2019 5:26:47 PM (IST)

தர்பார் இசை வெளியீட்டு விழா: சீமானை மறைமுகமாகச் சாடிய லாரன்ஸ்
ஞாயிறு 8, டிசம்பர் 2019 4:48:13 PM (IST)

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு ஸ்டாலின் கண்டனம்: மீண்டும் திமன்றத்தை நாட முடிவு
ஞாயிறு 8, டிசம்பர் 2019 9:31:35 AM (IST)

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு விண்ணப்பித்த தமிழக ஏட்டு
ஞாயிறு 8, டிசம்பர் 2019 9:24:57 AM (IST)

தமிழகத்தில் டிச. 27, 30 ஆகிய தேதிகளில் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு!
சனி 7, டிசம்பர் 2019 4:59:27 PM (IST)
