» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

2021 தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் அதிசயம், அற்புதம் நடக்கும்: ரஜினி நம்பிக்கை

வியாழன் 21, நவம்பர் 2019 5:29:54 PM (IST)

2021-இல் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை, அற்புதத்தை கண்டிப்பாக நிகழ்த்துவார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கோவாவில் நேற்று துவங்கிய இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் இன்று மாலை அவர் சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:  

"எனக்கு இந்த விருது வழங்கப்படுவதற்கு தமிழ் மக்களே காரணம். அவர்களுக்கே இந்த விருதை நான் சமர்ப்பிக்கிறேன்.   தமிழகத்தின் நலனுக்காக நடிகர் கமலுடன் இணைந்து செயல்படுவதாக இருந்தால் யாருக்கு முதல்வர் பதவி என்று கேள்விக்கு, அதெலாம் தேர்தல் நெருங்கும் சமயத்தில், அப்போதுள்ள சூழலின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய முடிவு. நான் கட்சி துவங்கி, நிர்வாகிகளை நியமிக்கும் வரை இதுகுறித்து எப்போதும் கருத்துக் கூற விரும்பவில்லை. இதையும் படிங்க: தமிழகத்தின் நலனுக்காக ரஜினியும்- நானும் இணைந்து செயல்படுவோம்: கமல் மீண்டும் உறுதி 2021-இல் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழக மக்கள் நான் கூறிய அதிசயத்தை, அற்புதத்தை 100 நூற்றுக்கு நூறு சதவீதம் கண்டிப்பாக நிகழ்த்துவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory