» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வெப்பசலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

வியாழன் 21, நவம்பர் 2019 7:23:09 PM (IST)

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் நாளை (நவ.22) மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் புவியரசன் வியாழக்கிழமை கூறும் போது,வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை (நவ.22) மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூா், சேலம் ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும், கடலோர மாவட்டங்களின் சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னையில் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory