» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 3 அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.400 கோடி நிதி: தமிழக அரசு அரசாணை வெளியீடு

வெள்ளி 22, நவம்பர் 2019 12:40:42 PM (IST)

தமிழகத்தில் 3 அரசு மருத்துவமனைகளை விரிவாக்கம் செய்து, நவீன வசதிகள் ஏற்படுத்த ரூ.400 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, கோவை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 3 அரசு மருத்துவமனைகளையும் விரிவாக்கம் செய்யவும், நவீன வசதிகள் ஏற்படுத்தவும் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ரூ.144 கோடியும், மதுரை அரசு மருத்துவமனைக்கு ரூ.131 கோடியும், கோவை அரசு மருத்துவமனைக்கு ரூ.124 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory