» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

2021ல் ரஜினி சொல்லும் அதிசயமும் அற்புதமும் நிகழாது : அமைச்சர் ஜெயகுமார்

வெள்ளி 22, நவம்பர் 2019 1:37:22 PM (IST)

தமிழகத்தில் 2021-ம் ஆண்டில் ரஜினி சொல்லும் அதிசயமும் அற்புதமும் நிகழாது என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

நாகர்கோவிலில் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-தமிழகத்தில் 2021-ல் அதிசயத்தையும், அற்புதத்தையும் தமிழக மக்கள் நிகழ்த்துவார்கள் என ரஜினி காந்த் கூறி உள்ளார். தமிழக மக்கள் அ.தி.மு.க. பக்கம் இருக்கும்வரை ரஜினி சொல்லும் அதிசயமும், அற்புதமும் நிகழாது. ரஜினிகாந்த், கமல் ஹாசன் கூட்டணியால் அ.தி.மு.க.வுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. தமிழகத்தில் அசைக்கமுடியாத மக்கள் சக்தியாக அதிமுக. உள்ளது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக. அமோக வெற்றிபெற்றது. வருகிற உள்ளாட்சி தேர்தலில் மட்டும் அல்ல 2021 தேர்தலிலும் நாங்கள் தான் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவோம்.உள்ளாட்சி தேர்தல் என்றாலே திமுக.வினருக்கு அலர்ஜி என்பதால் அவர்கள் இதை விரும்பாமல் உள்ளனர். அ.ம.மு.க. கட்சி சார்ஜ் இல்லாத பேட்டரியாகிவிட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory