» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மனைவிக்கு கொலை மிரட்டல்: திமுக முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு 3 ஆண்டு சிறைதண்டனை!!

வெள்ளி 22, நவம்பர் 2019 3:56:53 PM (IST)

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ அசோகனுக்கு 3 ஆண்டு சிறைதண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2006 ஆண்டு வரை, திருவாரூர் தொகுதி திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் அசோகன். இவர், தனது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கு எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அசோகனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 11 ஆயிரம் அபராதம் விதித்தார். அதேசமயம் வழக்கில் அசோகனின் கோரிக்கையை ஏற்று ஒரு மாதத்திற்கு தண்டனையை நிறுத்து வைப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory