» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சனி 30, நவம்பர் 2019 5:05:25 PM (IST)

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மிகக் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னையில் 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்யும். மணிக்கு 40 கி.மீ. -  50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால், குமரி கடல், மாலத்தீவு பகுதி, லட்சத் தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. அதிகபட்சமாக தலைஞாயிறு பகுதியில் 16 செ.மீ. மழையும், மயிலாடுதுறையில் 14 செ.மீ. மழையும், புதுக்கோட்டையில் 13 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்று கூறினார். மேலும், லட்சத் தீவு பகுதியில் நாளை உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை என்றும் புவியரசன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory