» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படையுங்கள்: பொன் மாணிக்க வேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
திங்கள் 2, டிசம்பர் 2019 5:22:41 PM (IST)
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு வழக்கு ஆவணங்களை உயர்அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், பொன் மாணிக்கவேலின் பணியை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனு மீது, எதற்காக பணியை நீட்டிக்க வேண்டும் என விளக்கம் கேட்டு பொன் மாணிக்க வேலுவுக்கும், டிராபிக் ராமசாமிக்கும் ராஜேந்திரனுக்கும் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வழக்கு விசாரணைகள் குறித்த ஆவணங்களை ஒப்படைக்குமாறு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி ஏ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு தமிழக அரசு கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றம், அல்லது உச்சநீதிமன்றம் அனுமதியின்றி ஆவணங்களை ஒப்படைக்க முடியாது. எனது பதவி நீட்டிப்பு தொடா்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, உச்சநீதிமன்றம் அது தொடா்பான உத்தரவிடும்வரை காத்திருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவின்றி ஆவணங்களை ஒப்படைக்க முடியாது என பொன் மாணிக்கவேல் தமிழ்நாடு அரசுக்கு நேற்ற பதில் கடிதம் அனுப்பினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தர்பார் இசை வெளியீட்டு விழா: சீமானை மறைமுகமாகச் சாடிய லாரன்ஸ்
ஞாயிறு 8, டிசம்பர் 2019 4:48:13 PM (IST)

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு ஸ்டாலின் கண்டனம்: மீண்டும் திமன்றத்தை நாட முடிவு
ஞாயிறு 8, டிசம்பர் 2019 9:31:35 AM (IST)

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு விண்ணப்பித்த தமிழக ஏட்டு
ஞாயிறு 8, டிசம்பர் 2019 9:24:57 AM (IST)

தமிழகத்தில் டிச. 27, 30 ஆகிய தேதிகளில் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு!
சனி 7, டிசம்பர் 2019 4:59:27 PM (IST)

சிறையில் 10 நாட்களாக இருந்து வந்த உண்ணா விரதத்தை வாபஸ் பெற்றார் நளினி
சனி 7, டிசம்பர் 2019 4:35:08 PM (IST)

விஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்: கோவையில் திடீர் நிச்சயதார்த்தம்!
சனி 7, டிசம்பர் 2019 4:03:17 PM (IST)
