» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று வாழ்த்தி பேசிய விவகாரம்: அரசகுமாருக்கு பாஜக கட்டுப்பாடு

திங்கள் 2, டிசம்பர் 2019 5:37:30 PM (IST)

மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று வாழ்த்தி பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் பி.டி. அரசகுமார் ஊடகங்களில், கூட்டங்களில் கலந்துகொள்ள தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கட்டுப்பாடு விதித்துள்ளார்.

புதுக்கோட்டை திருமண நிகழ்ச்சியி்ல் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என பா.ஜ.க. மாநில துணை தலைவர் அரசகுமார் பேசினார். மேலும், எம்.ஜி.ஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் தலைவர் மு.க. ஸ்டாலின். அவர் நினைத்தால் கூவத்தூர் சம்பவத்தின் போதே முதல்வராகியிருக்க முடியும். ஆனால் அவர் ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார். காலம் வரும் கட்டாயம் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் எனப் பேசினார். அரசகுமாரின் இந்த பேச்சு பா.ஜ.க.வினரிடையே சலசலப்பினை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தனது பேச்சு பற்றி செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியில்,  திருமணம் நடைபெறும் இடத்தில் ஸ்டாலினை சந்தித்தேன். திட்டமிட்டு சந்திக்கவில்லை, என் தனிப்பட்ட உணர்வுகளை நான் வெளிப்படுத்தினேன். ஸ்டாலினை சாதாரணமாக தான் வாழ்த்தினேன்.கட்சி தலைமை என்ன முடிவு எடுத்தாலும் அதனை ஏற்க தயார் என அரசகுமார் கூறியுள்ளார். இந்த பேச்சு குறித்து அரசகுமாரிடம் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் விளக்கம் கேட்டார், அதற்கு நேரடியாகவும், எழுத்தும் மூலமாகவும் அரசகுமார் விளக்கம் அளித்திருந்த நிலையில் கட்சிக் கூட்டங்கள், ஊடக விவாதங்களில் அரசகுமார் பங்கேற்கக்கூடாது என தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் நரேந்திரன் அறிவித்திருக்கிறார். மேலும், பாஜக டெல்லி தலைமைக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம், அங்கிருந்து வரும் முடிவு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நரேந்திரன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

சாமிDec 2, 2019 - 06:47:40 PM | Posted IP 49.20*****

ஐந்தாம்படைகள் எல்லா இடத்திலும் உண்டு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory