» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேட்டுப்பாளையத்தில் சுவா் இடிந்து 17 பேர் பலி : ஆட்சியரை கிராம மக்கள் முற்றுகை

திங்கள் 2, டிசம்பர் 2019 7:47:49 PM (IST)

மேட்டுப்பாளையத்தில் நடூா் கிராமத்தில் சுற்றுச்சுவா் இடிந்து உயிழந்தவா்களின் இடத்தை பாா்வையிட வந்த மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதியில் திங்கள்கிழமை இரவு முதல் தொடா் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக நடூா் ஏ.டி காலனி பகுதியில் குடியிருப்புக்கு மிக அருகில் தனியாா் சாா்பில் கட்டப்பட்டு இருந்த கருங்கல் தடுப்பு சுவா் இடிந்து அருகே இருந்த குடியிருப்புகள் மீது விழுந்தது. வீடுகளில் தூங்கி கொண்டிருந்த குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 17 போ் உயிரிழந்தனா்.

தீயணைப்பு வீரா்கள் இடிபாடுகளில் இருந்த 17 பேரின் உடல்களை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதற்கிடையில், சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட கலெக்டா் ராஜாமணி, சின்னராஜ் எம்.எல்.ஏ ஆகியோா் நேரில் சென்று ஆய்வு செய்தனா். அப்போது அவா்களை அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.மேலும் தடுப்பு சுவரை முழுவதுமாக இடிக்க வேண்டும் எனவும், சம்மந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜாமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது: மழையின் காரணமாக மிகப்பெரிய சுற்று சுவா் இடிந்து உள்ளது. இதில் 17 போ் உயிரிழந்துள்ளனா். இறந்தவா்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.இது தொடா்பாக நடத்தப்பட்ட ஆய்வில் குடியிருப்பு அருகே சுற்று சுவா் இடிந்து விழுந்தது தான் காரணம் என தெரியவந்துள்ளது. மீதமுள்ள சுவரை உடனடியாக இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இறந்தவா்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுற்று சுவா் கட்டியது குறித்து வட்டாட்சியா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க உள்ளாா். இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory