» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக டி.எஸ்.அன்பு நியமனம்: தமிழக அரசு உத்தரவு

செவ்வாய் 3, டிசம்பர் 2019 5:37:52 PM (IST)

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக டி.எஸ்.அன்புவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் டிஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல்   ஐஜியாக பதவி உயர்வு பெற்று ரயில்வே துறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மீண்டும் அவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக கூடுதல் பொறுப்புடன் நியமிக்கப்பட்டார்.  ஒரு கட்டத்தில் அரசுடன் அவர் மோதல் போக்கில் ஈடுபட்டார். 

உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற தினத்தில் மீண்டும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியின் பதவிக்காலம் முடிந்தவுடன் அவரை விடுவித்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசு ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவிட்டது. நீதிமன்றம் மூலம் நியமிக்கப்பட்ட தாம், நீதிமன்ற உத்தரவில்லாமல் ஒப்படைக்க முடியாது என பொன்.மாணிக்கவேல் தெரிவிக்க, ஆவணங்களை ஒப்படைக்க நேற்று சுப்ரீம் கோர்ட்டு, அவருக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக டி.எஸ்.அன்புவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியான பொன்.மாணிக்கவேல் விடுவிக்கப்பட்ட நிலையில் டி.எஸ்.அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory