» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சகோதரர்!

வியாழன் 5, டிசம்பர் 2019 12:26:24 PM (IST)

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சகோதரர் (பெரியம்மா மகன்) விஸ்வநாதன் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். 

அண்ணா அறிவாலயத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தோற்றத்துடன் ஒருவர் காரிலிருந்து இறங்கி வந்தார். அவரது நடை உடை பாவனை முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப்போலவே இருந்ததால் செய்தியாளர்கள் அவரிடம் சென்று தாங்கள் யார் என விசாரித்தனர். அப்போது அவர் தனது பெயர் விஸ்வநாதன் என்றும், அதிமுகவில்தான் இருக்கிறேன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த பெரியம்மாவின் மகன், அவரது சகோதரர் என்றும் சேலம் மாவட்டம் நடுங்குலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்ததாகவும் தன்னதை அறிமுகப்படுத்தினார். 

மேலும், அவரது மகன்கள் ரஞ்சித், கார்த்தி அகியோருடன் திமுகவில் இணைய வந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். உள்ளேச்சென்ற அவர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். விஸ்வநாதன் நெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவராகவும், அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்தவர். இவர் தனது அண்ணனான முதல்வர் பழனிசாமி மீதும், கட்சி மீதும் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார். மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசாக தமிழக அரசு செயல்படுகிறது, அதிமுகவில் ஜனநாயகம் இல்லை என்பதால் திமுகவில் இணைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory