» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெயலலிதா 3ம் ஆண்டு நினைவு தினம்: முதல்வர், துணை முதல்வர், ஜெ.தீபா மரியாதை

வியாழன் 5, டிசம்பர் 2019 3:22:57 PM (IST)ஜெயலிலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிமுகவினர் பேரணியாக வந்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் அவரது நினைவிடத்தில் வெளியூர்களில் இருந்து வந்திருந்த ஏராளமான கட்சி தொண்டர்கள் நிர்வாகிகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினர்.

கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் வாலாஜா சாலையில் இருந்து மவுன ஊர்வலமாக நடந்து சென்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். மவுன ஊர்வலத்தில் அவைத்தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், தலைமை கழக நிர்வாகிகள் பொன்னையன், உள்பட ஆயிரக்கணக்கான பேர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். 

ஜெ நினைவிடத்தில் ஜெ.தீபா மரியாதை ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா கணவர் மாதவனுடன் காலை 10 மணியளவில் வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பசும்பொன் மக்கள் கழக தலைவர் இசக்கி முத்து நிர்வாகிகளுடன் சென்றுஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory