» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மெரீனாவை உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்றுக: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வியாழன் 5, டிசம்பர் 2019 4:11:56 PM (IST)

மெரீனா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை மெரீனா கடற்கரையை சுத்தமாக வைப்பது குறித்து டிசம்பர் 13ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சிக்கும், காவல்துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெரீனா கடற்கரையில் உள்ள மீன் கடைகளை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அடுத்த ஆறு மாதத்துக்குள் மெரீனா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. 

மேலும், மெரீனா கடற்கரையில், உணவுப் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத கடைகளை அகற்ற வேண்டும். விதிமீறி நடத்தப்படும் கடைகளை தேவைப்பட்டால் கட்டாயப்படுத்தி அகற்றலாம். கடற்கரை அழகை மறைக்கும் வகையில் இருக்கும் கடைகளை, கடற்கரையை நோக்கி நேர்நிலையாக அமைக்கலாம் என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST




Tirunelveli Business Directory