» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இருமுடி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ரயில்கள் மேல்மருவத்தூரில் ரயில்கள் நின்று செல்லும்

வியாழன் 5, டிசம்பர் 2019 4:50:50 PM (IST)

இருமுடி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், மேல்மருவத்தூர் இருமுடி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 19 முதல் பிப்ரவரி 8 வரை மதுரை - சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ், செங்கோட்டை - சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ், தஞ்சாவூர் வழியாக செல்லும் மதுரை - சென்னை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ஆகியவையும் டிசம்பர் 20 முதல் பிப்ரவரி 7 வரை மும்பை குர்லா - மதுரை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ஆகியவையும் டிசம்பர் 20 முதல் பிப்ரவரி 9 வரை இரு மார்க்கங்களிலும் 

சென்னை - மதுரை - சென்னை வைகை எக்ஸ்பிரஸ், சென்னை - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ், தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ஆகியவையும், டிசம்பர் 21 முதல் பிப்ரவரி 8 வரை டில்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ், மதுரை - மும்பை குர்லா எக்ஸ்பிரஸ் ஆகியவையும், டிசம்பர் 22 முதல் பிப்ரவரி 9 வரை மதுரை - டில்லி நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் - புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ஆகியவையும், டிசம்பர் 26 முதல் பிப்ரவரி 6 வரை சென்னை எழும்பூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ஆகியவையும் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆராதனை விழாவை முன்னிட்டு டிசம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை மைசூரிலிருந்து புறப்படும் மைசூர் - தூத்துக்குடி விரைவு ரயில், டிசம்பர் 14 முதல் டிசம்பர் 21 வரை தூத்துக்குடியிலிருந்து புறப்படும் தூத்துக்குடி - மைசூர் விரைவு ரயில், டிசம்பர் 17 அன்று கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் விரைவு ரயில், டிசம்பர் 18 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம் - கோயம்புத்தூர் விரைவு ரயில் ஆகியவை ஊஞ்சலூர் ரயில்நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory